Thursday 9 June 2011

2வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வதி்தியாசத்தில் வெற்றி

போர்ட் ஆப் ஸ்பெயின்: முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளை சிறப்பாக ஆடி வென்ற இந்தியா, 2வது போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா ஆடியபோது ஒன்றரை மணி நேரம் மழை குறுக்கிட்டது. இதனால் 37 ஓவர்களில் 183 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாக முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது.

பின்னர் இந்தியா ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவன் சிறப்பாக ஆட முடியாவிட்டாலும் கூட, விராத் கோலியும், பார்த்திவ் படேலும் சிறப்பாக ஆடி மேற்கு இந்தியத் தீவுகளை திராட்டில் விட்டனர். விராத் கோலி சிறப்பாக ஆடி 81 ரன்களைக் குவித்தார். அதேபோல பார்த்திவ் படேலும் 56 ரன்களைச் சேர்த்தார். இருவரும் சேர்ந்து 120 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை இந்தியாவுக்கு சாதகமாக திருப்பி விட்டனர்.

பின்னர் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் சேர்ந்து நிலைமையை மேலும் பலப்படுத்தினர். இறுதியில் ரெய்னாவும், ரோஹித் சர்மாவும் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

முன்னதாக ஓபனர் ஷிகார் தவன் 3 ரன்கள் எடுத்திருந்தபோது ரவி ராம்பாலின் பந்தில் வீழ்ந்தார். இருப்பினும் பார்த்திவ் படேலும், விராத் கோலியும் சேர்ந்து சரிவை தடுத்து நிறுத்தி ஆட ஆரம்பித்தனர். இருவரும் சேர்ந்து கேப்டன் சமி மற்றும் ராம்பாலின் பந்துகளை நொறுக்கினர்.

இந்தியா 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மழை பெய்ததால் ஆட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது. இதையடுத்து 37 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எளிதான இலக்குடன் தொடர்ந்து ஆடிய இந்தியா, மேலும் இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது. 33.4 ஓவர்களிலேயே இந்தியா வெற்றி இலக்கை அடைந்து தொடரில் 2-0 என்ற முன்னிலையைப் பெற்றது.
 
சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.

மொத்தம் 5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இந்தியா 2 போட்டிகளை வென்று முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment